×

மிரட்ட காத்திருக்கும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள்: டேல் ஸ்டெயின் கணிப்பு

கேப்டவுன்: உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா தொடங்க இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் ரசிகர்கள் மத்தியில் கிரிக்கெட் ஜுரம் தொற்றிக்கொண்டுள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணி எது, அதிகரன் , அதிக விக்கெட் வீழ்த்தப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தென்ஆப்ரிக்க முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் உலக கோப்பையில் அசத்தப்போகும் 5 வேகப்பந்துவீச்சாளர்களை கணித்துள்ளார். அவர் கூறுகையில், பாகிஸ்தானின் ஷாகின்ஷா அப்ரிடி இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மாவுக்கு பெரும் சவாலாக இருப்பார்.

இருவரும் இதுவரை 3 ஒருநாள் போட்டிகளில் எதிர்கொண்டதில் 2 முறை அவுட் ஆக்கி உள்ளார். அப்ரிடியை தவிர தென்ஆப்ரிக்காவின் ககிசே ரபாடா, நியூசிலாந்தின் டிரென்ட் போல்ட், இங்கிலாந்தின் மார்க்வுட் , இந்தியாவின் முகமது சிராஜ் ஆகியோர் உலக கோப்பையில் சாதிக்கலாம். சிராஜ் பந்தை நன்றாக ஸ்விங் செய்கிறார். அவர் பெரிய பேட்டர்களை வீழ்த்துவார், இந்தியாவின் முக்கிய பவுலராக இருப்பார், என்றார். ஆனால் ஸ்டெயின் பும்ராவை 5 பேர் பட்டியலில் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post மிரட்ட காத்திருக்கும் 5 வேகப்பந்து வீச்சாளர்கள்: டேல் ஸ்டெயின் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : Dale Steyn ,Cape Town ,World Cup cricket festival ,Dinakaran ,
× RELATED தண்ணீரை சேமிக்காவிட்டால் சென்னை,...