
திருவனந்தபுரம்: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 5ம் தேதி தொடங்க உள்ள நிலையில் தற்போது பயிற்சி போட்டிகள் நடந்துவருகிறது. அதன்படி இந்திய அணி தனது 2வது பயிற்சி போட்டியில் நாளை நெதர்லாந்துடன் மோத உள்ளது. இந்த போட்டி திருவனந்தபுரத்தில் நடக்கிறது. ஆனால் திருவனந்தபுரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 29ம்தேதி ஆப்கன்-தென்ஆப்ரிக்கா போட்டி கைவிடப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் நெதர்லாந்து-ஆஸ்திரேலியா மோதிய போட்டி பாதியில் ரத்தானது.
நாளையும் 80 சதவீதத்திற்கு மேல் மழைக்கு வாய்ப்பு இருப்பதால் இந்தியா-நெதர்லாந்தின் பயிற்சி ஆட்டமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.ஏ ற்கனவே கவுகாத்தியில் நேற்று முன்தினம் இந்தியா-இங்கிலாந்து மோத இருந்த பயிற்சிஆட்டமும் மழையால் கைவிப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை மேலும் 2 பயிற்சி போட்டி நடக்கிறது. கவுகாத்தியில் ஆப்கன்-இலங்கை, ஐதராபாத்தில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா மோத உள்ளன.
The post திருவனந்தபுரத்தில் நாளை நடக்கும் இந்தியா-நெதர்லாந்து பயிற்சி போட்டிக்கு மழை அச்சுறுத்தல் appeared first on Dinakaran.