×

காந்தி வேடமணிந்து மாணவர்கள் பேச்சு போட்டியில் அசத்தல் செய்யாறு அருகே நூலகத்தில்

செய்யாறு: செய்யாறு அருகே பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நடந்த பேச்சு போட்டியில் பள்ளி மாணவர்கள் காந்தி வேடமணிந்து பங்கேற்று அசத்தினர். செய்யாறு அடுத்த வெம்பாக்கம் வட்டம் பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் காந்திஜெயந்தியை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டி மற்றும் பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தன்னம்பிக்கை பயிற்சியாளர் தி.வடிவேல் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காந்தியின் நற்பண்புகள், அவர் பின்பற்றி வழிமுறைகள் குறித்து எடுத்துக்கூறினார். இதில் பள்ளி மாணவர்கள் காந்தி வேடமணிந்து பேச்சு போட்டியில் கலந்துகொண்டு அசத்தி, சிறப்பு பரிசுகள் பெற்றனர். இப்போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் நூலகர் ஜா.தமீம் நன்றி கூறினார். செய்யாறு அருகே பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் நடந்த பேச்சு போட்டியில் காந்தி வேடமணிந்து பங்கேற்ற மாணவர்கள்.

The post காந்தி வேடமணிந்து மாணவர்கள் பேச்சு போட்டியில் அசத்தல் செய்யாறு அருகே நூலகத்தில் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Asthal Seyyar ,Seyyar ,Perungattur ,Jayanti ,
× RELATED கிண்டி காந்தி மண்டப வளாகத்தில்...