×

கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு

நெல்லை: கூட்டுறவு மேலாண்மை நிலையத்தால் வழங்கப்படும் பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு அக்.6ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாளையங்கோட்டை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தின் முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை மேடைதளவாய் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வழங்கப்படும் பட்டயப் பயிற்சியில் சேருவதற்கு செப்.22ம் தேதி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மாணவர் சேர்க்கை அக்.6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியில் பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு படித்து மூன்றாண்டு பட்டயப் படிப்பிற்கு பிறகு மூன்றாண்டு பட்டயப் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். நிகழாண்டு ஆகஸ்ட் 1ம்தேதி அன்று 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பயிற்சிக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.200, பயிற்சி கட்டணம் ரூ.18,750 ஆகியவற்றை மேலாண்மை நிலையத்தில் ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்புவோர் தங்களது கல்விச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், புகைப்படம் ஆகியவற்றை மாணவர் சேர்க்கையின் போது கொண்டு வரவேண்டும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு முதல்வர், மேடைதளவாய் குமாரசாமி மேலாண்மை கூட்டுறவு பயிற்சி நிலையம், உதயா நகர், என்ஜிஓ காலனி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-7 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0462-2552695 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

The post கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிப்பு appeared first on Dinakaran.

Tags : Nellai ,Cooperative Management Center ,Dinakaran ,
× RELATED அஞ்சல் வழி, பகுதிநேர கூட்டுறவு மேலாண் பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்