×

புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை குறைவு

 

திருப்பூர், அக்.2: புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை குறைந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிகரித்தது. திருப்பூர் தென்னம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் திருப்பூரின் பல்வேறு பகுதி மக்கள் உள்ளிட்ட சில்லரை வியாபாரிகளும் மீன்களை வாங்கி செல்வார்கள்.

குறிப்பாக விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமைகளில் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். இந்நிலையில், புரட்டாசி மாதம் தொடங்கியதையடுத்து மீன்கள் விலை குறைந்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில் உள்ள வடமாநிலத்தவர்கள் மற்றும் புரட்டாசி விரதத்தை கடைபிடிக்காத மக்கள் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க குவிந்தனர். இதனால் தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

The post புரட்டாசி மாதத்தால் மீன்கள் விலை குறைவு appeared first on Dinakaran.

Tags : Puratasi ,Tirupur ,Thennampalayam ,Dinakaran ,
× RELATED மத்திய பஸ் நிலையத்தில் அத்துமீறும் காதல் ஜோடிகள்