×

கிருஷ்ணராயபுரத்தில் தெருக்களில் தூய்மைப் பணிகள்

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பேரூராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பகுதிகளில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தெருகளில் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. பேரூராட்சி தலைவர். சேது மணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் யுவராணி முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள், 4வது வார்டு பகுதியில் உள்ள தெருக்களில் தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராதிகா, சிசப்பிரியா, ரேகா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கிருஷ்ணராயபுரத்தில் தெருக்களில் தூய்மைப் பணிகள் appeared first on Dinakaran.

Tags : Krishnarayapuram ,Karur district ,Gandhi Jayanti ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே அதிக செலவு என்றாலும் வயலில் மாடு கட்டி உழவு