×

பெரியபாளையம் அருகே புதிய ஊராட்சி மன்றம் கட்ட கோரிக்கை

 

பெரியபாளையம், அக். 2: பூரிவாக்கம் ஊராட்சியில் சேதமடைந்துள்ள பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றி விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே பூரிவாக்கம் ஊராட்சியில் சுமார் 3 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இங்கு உள்ள ஊராட்சி மன்ற கட்டிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்து, சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து, மழை காலங்களில் தண்ணீர் ஒழுகி முக்கியமான கோப்புகள் நனையும் நிலை ஏற்பட்டது.

இதனையடுத்து தற்காலிகமாக இந்த ஊராட்சி அலுவலகம் அங்குள்ள இ-சேவை மைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில் செயல்படாத பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை சுற்றி அடர்ந்த முட்புதர்கள் வளர்ந்து உள்ளது. சில நேரங்களில் இந்த கட்டிடம் சமூக விரோத செயல்களுக்கும், விஷம் நிறைந்த பாம்புகளுக்கு இருப்பிடமாக மாறி உள்ளது. இந்த கட்டிடம் அருகே தொடக்கப்பள்ளி உள்ளதால் மாணவர்களுக்கும் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பெரியபாளையம் அருகே புதிய ஊராட்சி மன்றம் கட்ட கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panchayat Hall ,Periyapalayam ,Purivakkam ,
× RELATED ஆவடி மாநகராட்சி சார்பில் புகையில்லா போகி பண்டிகை