×

லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது

லண்டன்: மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டு நிறைவு இந்தாண்டு இறுதியில் கொண்டாடப்படுகிறது. கடந்த 1659-ம் ஆண்டு பிஜாபூர் சுல்தானின் தளபதியாக இருந்த அப்சல் கானை சிவாஜி புலி நகத்தை பயன்படுத்தி கொன்றதாக நம்பப்படுகிறது. இரும்பினாலான இந்த புலி நகம் பின்னர் கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஜேம்ஸ் கிராண்ட் டுப் வசம் மராத்தாவின் கடைசிய பெஷாவராக இருந்த பாஜி ராவ்-II 1818ல் சரண்டைந்த போது ஒப்படைக்கப்பட்டு, பின்னர் விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்துக்கு பரிசளிக்கப்பட்டு அங்கு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிராவில் கண்காட்சியில் வைப்பதற்காக 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் சிவாஜியின் புலி நக ஆயுதம் நவம்பரில் இந்தியா கொண்டு வரப்பட இருக்கிறது. இது தொடர்பாக, விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியத்தின் இயக்குநர் டிரிஸ்டன் ஹண்டை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மகாராஷ்டிர கலாச்சாரத் துறை அமைச்சர் சுதீர் முங்கண்டிவார் நாளை மறுநாள் லண்டன் செல்கிறார்.

The post லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ள சத்ரபதி சிவாஜியின் புலி நக ஆயுதம் இந்தியா கொண்டு வரப்படுகிறது appeared first on Dinakaran.

Tags : Chhatrapati Shivaji ,London Museum ,India ,London ,Maharashtra ,
× RELATED இந்தியா கூட்டணி, காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை