
மகளிர் குத்துச்சண்டை 57 கிலோ எடை பிரிவு காலிறுதியில் உஸ்பெகிஸ்தானின் சிதோரா டர்டிபெகோவாவுடன் நேற்று மோதிய இந்திய வீராங்கனை பர்வீன் ஹூடா 5-0 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியதுடன் பாரிஸ் ஒலிம்பிக் ஒதுக்கீட்டு இடத்தையும் உறுதி செய்தார். நிக்கத் ஜரீன் (50 கி.), பிரீத்தி பவார் (54 கி.), லவ்லினா போர்கோஹைன் (75 கி.), நரேந்தர் பெர்வால் (92 கி.) ஆகியோரும் ஏற்கனவே தங்கள் பிரிவுகளில் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* மகளிர் பாக்சிங் 50 கிலோ எடை பிரிவில் தாய்லாந்தின் ரக்சத் சுதாமட்டுடன் நேற்று மோதிய இந்திய நட்சத்திரம் நிக்கத் ஜரீன் 1-2 என்ற கணக்கில் போராடி தோற்று வெண்கலப் பதக்கத்துடன் திருப்தி அடைந்தார்.
The post அரையிறுதியில் பர்வீன் ஹூடா appeared first on Dinakaran.