×

வெள்ளியாக மாறிய வெண்கலம்!

மகளிர் 100 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப் பந்தயத்தின் பைனலில் களமிறங்கிய இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி ‘தவறான தொடக்கம்’ எடுத்ததாக நடுவர்கள் அறிவித்தனர். ஆனால், சீன வீராங்கனை யான்னி வு தொடர்ச்சியாக 2 முறை தவறான தொடக்கம் எடுத்த நிலையில், அவருக்கு பதிலாக ஜோதி யாராஜி அந்த தவறை செய்ததாக நடுவர்கள் அறிவித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால், பதற்றமான மனநிலையில் போட்டியில் பங்கேற்ற நிலையில், ஜோதி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றதாக முடிவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நடுவர்களின் தவறு குறித்து இந்திய அணி நிர்வாகம் சார்பில் அதிகாரப்பூர்வமாக புகார் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போட்டியின் தொடக்கத்துக்கான வீடியோ பதிவை ஆய்வு செய்த அதிகாரிகள், ஜோதி தவறு இழைக்கவில்லை என்பதை உறுதி செய்து அவரது வெண்கலப் பதக்கத்தை வெளியாக மாற்றி அறிவித்தனர்.

The post வெள்ளியாக மாறிய வெண்கலம்! appeared first on Dinakaran.

Tags : India ,Jyoti Yaraji ,
× RELATED நாட்டுக்கு எதிரான குற்ற செயல்களில்...