
ஹான்சோ: ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையுடன், நடப்பு தொடரின் தடகள போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் என்ற பெருமையும் அவினாஷுக்கு (29 வயது) கிடைத்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கிடையே நேற்று களமிறங்கிய அவினாஷ், பந்தய தூரத்தை 8 நிமிடம், 19.50 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். இது ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் புதிய சாதனையாக அமைந்தது. முன்னதாக, 2018 ஜாகர்தா தொடரில் ஈரான் வீரர் உசேன் கீஹனி படைத்த சாதனையை (8 நிமிடம், 22.79 விநாடி) அவினாஷ் நேற்று முறியடித்தார்.
The post ஆண்கள் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்று அவினாஷ் சாதனை appeared first on Dinakaran.