×

மும்பை தாதா தாவூத் இப்ராகிமுக்கு பாக். உளவு பிரிவு கூடுதல் டிஜிபி பதவி

மும்பை: மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் தற்போது பாகிஸ்தானில் அந்நாட்டு அரசின் பாதுகாப்போடு கராச்சி நகரில் பதுங்கியுள்ளார். இதன் பின்னர் பாகிஸ்தானுக்கு தப்பி ஓடிய தாவூத் இப்ராகிம் கராச்சி நகரில் தங்கியிருக்கிறார். அவரை அமெரிக்காவும், ஐ.நா சபையும் தாவூத்தை சர்வதேச பயங்கரவாதி என்றும் அறிவித்தன. இந் நிலையில் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீண்ட காலமாகவே பாகிஸ்தான் உளவுத் துறைக்கு உதவி செய்து வந்த அவருக்கு கவுரமாக இந்த பதவி வழங்கப்பட்டிருப்பதாக இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

The post மும்பை தாதா தாவூத் இப்ராகிமுக்கு பாக். உளவு பிரிவு கூடுதல் டிஜிபி பதவி appeared first on Dinakaran.

Tags : Pak ,Dada Dawood Ibrahim ,Mumbai ,Additional DGP ,Intelligence Division ,Pakistan ,Intelligence Division Additional DGP ,Dinakaran ,
× RELATED இந்தியா தோற்றது கிரிக்கெட்டிற்கு நல்லது: பாக். மாஜி வீரர் சொல்கிறார்