×

ஜம்மு காஷ்மீரில் ரூ.300 கோடி போதைபொருள் பறிமுதல்: பஞ்சாப்பை சேர்ந்த 2 பேர் கைது

பனிஹால்: ஜம்மு நகர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு காஷ்மீரில் இருந்து ஜம்மு நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. ரயில்வே சவுக் பனிஹால் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ரம்பான் மாவட்ட காவல்துறையினர் அந்த வாகனத்தை தடுக்க முயன்றனர். நிற்காமல் சென்ற அந்த வாகனத்தை காவல்துறையினர் துரத்தி சென்று மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அப்போது வாகனத்தில் இருந்த 30 கிலோ கோகெய்ன் போதைப்பொருள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பேரை கைது செய்த ரம்பன் மாவட்ட காவல்துறையினர், அவர்களிடம் இருந்த போதைப்பொருள்களையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ எடையிலான கோகெய்ன் போதைப்பொருள்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.300 கோடி ஆகும்.

The post ஜம்மு காஷ்மீரில் ரூ.300 கோடி போதைபொருள் பறிமுதல்: பஞ்சாப்பை சேர்ந்த 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jammu and ,Kashmir ,Punjab ,Banihal ,Jammu ,Jammu Nagar National Highway ,
× RELATED ஆக்கிரமிப்பு காஷ்மீரை...