×

க.ஆடுதுறையில் வி.சி.க., செயற்குழு கூட்டம்

 

பெரம்பலூர்,செப்.30: குன்னம் தாலுக்கா, சு.ஆடுதுறையில் வி.சி.க., வேப்பூர் வடக்கு ஒன்றிய செயற்குழு கூட்டம் வடக்கு ஒன்றியசெயலாளர் வரதராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் தங்கதுரை பேசுகையில், ‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வி.சி.க., தலைவர் தொல். திருமாவளவன் சிதம்பரத்தில் போட்டியிடுவதால் கட்சித் தொண்டர்கள் அனைவரும் தலைவர் வெற்றிக்கு பாடுபட வேண்டும் என்றார்.

அப்போது சனாதானத்தை முழுமையாக எதிர்ப்பது உள்பட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிகழ்ச்சியில் சிதம்பரம் தேர்தல் பணிக்குழு விடுதலை செழியன், அரியலூர், பெரம்பலூர் மண்டல செயலாளர் அன்பானந்தம், மாவட்டச் செயலாளர் (கி) கலையரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார், மண்டல துணைச் செயலாளர் லெனின், ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

The post க.ஆடுதுறையில் வி.சி.க., செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : V.C.K. ,K.Aduthurai. ,Perambalur ,VCK ,Veypur Northern Union Executive Committee ,Aduthurai, Kunnam Taluk ,Northern Union ,Varadarajan ,Aduthurai ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை...