
அவிநாசி,செப்.30: உலக ரேபிஸ் தடுப்பு தினத்தை முன்னிட்டு அவிநாசி பேரூராட்சி,பொது சுகாதாரத்துறை, சேவூர் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அவிநாசி ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனரேஷன் இணைந்து நடத்திய உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு அவிநாசியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம் அவிநாசி கால்நடை மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது.
முகாமில், திட்ட செயல் அலுவலர், மருத்துவர் பரிமளா ராஜ்குமார், உதவி மருத்துவர்கள் மகேசுவரி, பாலசுப்பிரமணியம், மணிவண்ணன் மற்றும் மருத்துவமக்குழுவினர் பங்கேற்று நாய்களுக்கு தடுப்பூசியை போட்டனர். அவிநாசி பேருராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்பசாமி மற்றும் அவிநாசி ரோட்டரி நெக்ஸ்ட் ஜெனெரேஷன் சங்கத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் செந்தில்பிரபு,பொருளாளர் செல்வகுமார்,பட்டைய தலைவர் மருத்துவர் பிரகாஷ்,பட்டைய செயலாளர் ஜெயப் பிரகாஷ், சங்க உறுப்பினர்கள் மோகன் மற்றும் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில், வீடுகளில் வளர்ப்பு நாய்கள் சுமார் 200 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
The post அவிநாசியில் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி appeared first on Dinakaran.