
தக்கலை, செப். 30 : பத்மனாபபுரம் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பத்மனாபபுரம் தொகுதிக்கு உட்பட்ட இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் ஏதேனும் குறைகள், ஆக்கிரமிப்பு நிலங்கள் மற்றும் வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் வாங்கும் முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு இந்து சமய அறநிலையத்துறை அறங்காவலர் குழு தலைவர் (குமரி மாவட்ட திருக்கோயில்கள், சுசீந்திரம்) பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இணை ஆணையாளர் ரத்னவேல் பாண்டியன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜோதீஷ்குமார், துளசிதரன் நாயர், சுந்தரி மற்றும் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பொதுமக்கள் கோயில்களின் அடிப்படை வசதிகள் மேம்படுத்துதல், வேலைவாய்ப்பு சம்மந்தமாகவும், கோயில் திருப்பணிகள் குறித்தும், பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்கள் வைத்தல், பழுதான தேர்கள் பராமரிப்பு போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
The post தக்கலையில் அறநிலையத்துறை குறை தீர்க்கும் முகாம் appeared first on Dinakaran.