×

மொபைல் செயலியை பயன்படுத்தி இ-கேஒய்சி உறுதி செய்ய வாய்ப்பு கிசான் சம்மான் நிதியை தொடர்ந்து பெற

திருவண்ணாமலை, செப்.29: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது தவணை தொகையை தொடர்ந்து பெற, மொபைல் செயலியை பயன்படுத்தி இ-கேஒய்சி உறுதி செய்யலாம்.
இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்திருப்பதாவது: பிரதமமந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் தங்களது ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கிணை இணைத்தல் மற்றும் நில ஆவணங்களை இணைத்தல் போன்ற பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வங்கிக் கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க முடியாத விவசாயிகள், இ-கேஒய்சி செய்ய முடியாதவர்கள் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதில் சிக்கல் உள்ள விவசாயிகள், அருகில் உள்ள தபால் நிலையங்களில் புதிய சேமிப்பு கணக்கு தொடங்கி பயன்பெறலாம்.

கிராம தபால் நிலையத்தில் வழங்கப்பட்டுள்ள செல்போன் மற்றும் பயோமெட்ரிக் கருவி மூலம் ஆதார் மற்றும் செல்போன் எண் பதிவுசெய்து, ஜீரோ இருப்பு கணக்கை விவசாயிகளுக்கு உடனடியாக தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில், 10,747 விவசாயிகளின் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவில்லை. மேலும், 15,780 நபர்கள் இ-கேஒய்சி முடிக்காமல் உள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட நபர்கள் என்ற செயலியை மொபைலில் பதிவிறக்கம் செய்து, தாங்களாகவே இ-கேஒய்சி செய்துகொள்ளலாம். மேலும், இ-சேவை மையம், தபால் நிலையம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை அணுகியும் இப்பணியினை முடிக்கலாம். மேலும், 3,751 விவசாயிகள் தங்கள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர். எனவே, இப்பணிகளை நாளைக்குள் முடித்தால் மட்டுமே பிரதம மந்திரியின் கிசான் சம்மான் நிதியை தொடர்ந்து விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post மொபைல் செயலியை பயன்படுத்தி இ-கேஒய்சி உறுதி செய்ய வாய்ப்பு கிசான் சம்மான் நிதியை தொடர்ந்து பெற appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,Prime ,Dinakaran ,
× RELATED மகாதீபம் 40 கி.மீ. சுற்றளவு வரை...