×

ஓட்டுநர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் அமைச்சர் எ.வ.வேலு தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக அமைப்புசாரா

திருவண்ணாமலை, செப்.28: திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்தில் திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி ஒன்றிய, நகர, பேரூர் கழக பொறுப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. இந்த பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருவண்ணாமலை சாரோனில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்திலும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தை சேர்ந்தவர்கள், வந்தவாசியில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று உரிய ஆவணங்களுடன் பூர்த்தி செய்து அந்ததந்த மாவட்ட அலுவலகங்களில் வரும் 5ம் தேதிக்குள் அளிக்க வேண்டும்.

நகர, ஒன்¬றியம் அமைப்பிற்கு ஒரு அமைப்¬பா¬ளர், ஒரு தலைவர், ஒரு துணைத்தலைவர், 7 துணை அமைப்¬பா¬ளர்¬கள் நியமிக்கப்¬ட உள்ளனர். பேரூர் அமைப்பிற்கு ஒரு அமைப்¬பா¬ளர் மற்றும் 5 துணை அமைப்¬பா¬ளர்-கள் நியமிக்கப்பட உள்ளனர். விண்ணப்பிக்கும் நபர்கள், அமைப்பு சாரா ஓட்டுநராக இருக்க வேண்டும். ஆட்டோ, கார், கால்டாக்சி, தனியார் பஸ், பள்ளி, கல்லூரி வாகனங்கள், லாரி, டூரிஸ்ட் வேன், 108 அம்புலன்ஸ், டிராக்டர் மற்றும் விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்கள் ஆகியவற்றின் ஓட்டுநர்களாக இருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம் இருக்க வேண்டும். முழு¬மையா¬கப் பூர்த்தி செய்த விண்¬ணப்¬பங்¬களை, 5ம் தேதிக்குள் ஒப்-படைக்கவேண்¬டும். தாம¬த¬மாக வரும் விண்¬ணப்¬பங்¬கள் ஏற்கப்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஓட்டுநர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க வரும் 5ம் தேதி வரை அவகாசம் அமைச்சர் எ.வ.வேலு தகவல் திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக அமைப்புசாரா appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,DMK ,Tiruvannamalai district ,Thiruvannamalai ,
× RELATED பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில்...