×

கர்நாடகாவில் இருந்து காரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது

 

கூடலூர்,செப்.25: கர்நாடகாவில் இருந்து காரில் கூடலூருக்கு போதைப் பொருள் கடத்தி வந்த இருவரை மசினகுடி போலீசார் கைது செய்துள்ளனர். தமிழக-கர்நாடக எல்லை கக்கனல்லா சோதனை சாவடியில் நேற்று போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது, கர்நாடகாவில் இருந்து கூடலூர் நோக்கி வந்த கார் ஒன்றில் இருந்த இருவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணான தகவல் தெரிவித்தனர். சந்தேகத்தில் காரில் சோதனையிட்ட போது, அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த எம்டிஎம் போதை பொருள் கைப்பற்றப்பட்டது.

காரில் வந்த செம்பாலா பகுதியைச் சேர்ந்த ஷாநவாஸ் (28), மேல் கூடலூர் ஓவிஎச் ரோடு பகுதியில் வசிக்கும் சையத் இப்ராஹிம் (31) ஆகிய இருவரையும் கை செய்த போலீசார் சுமார் ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள 23 கிராம் எம்டிஎம் போதை பொருள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் கூடலூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார்.

The post கர்நாடகாவில் இருந்து காரில் போதைப்பொருள் கடத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kudalur ,Masinakudi police ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, கர்நாடகாவில் தேசிய...