×

குருத்துக்குளி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

 

ஊட்டி,செப்.24: ஊட்டியில் இருந்து குருத்துக்குளி செல்லும் சாலை பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். ஊட்டியில் இருந்து தீட்டக்கல் வழியாக குருத்துக்குளி கிராமத்திற்கு சுமார் 12 கி.மீ., தூரம் உள்ளது. இச்சாலையில் தீட்டுக்கல் பகுதியில் இருந்து குருத்துக்குளி கிராமத்திற்கு செல்லும் வரையில் சாலையில் பல்வேறு இடங்களிலும் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், இந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சில இடங்களில் இந்த மழை நீருடன் கழிவு நீரும் கலந்துக் காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களும் இந்த பள்ளங்களை தவிர்த்து செல்லும் போது தவறி விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் குருத்துக்குளி செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். குறிப்பாக, தீட்டுக்கல் அருகே ஏற்பட்டுள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொசதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post குருத்துக்குளி செல்லும் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kuruthukuli ,Ooty ,Thittakal ,Dinakaran ,
× RELATED ஊட்டி சுற்று வட்டாரத்தில் ஸ்ட்ராபெர்ரி பழச்செடிகள் பராமரிப்பு பணி