×

நெல்லியாளம் நகராட்சியில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம்

 

பந்தலூர்,செப்.24: பந்தலூரில் நெல்லியாளம் நகர திமுக வாக்குச்சாவடி முகவர்கள் (பிஎல்ஏ 2) கூட்டம் தனியார் மண்டபத்தில் நகர செயலாளர் சேகர் தலைமையில் நடைப்பெற்றது. தலைமை செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம்,விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலன்,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில்நெல்லியாளம் நகராட்சியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்துகொள்வது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் நகர நிர்வாகிகள் பொன்ராஜ், சிவசுப்பிரமணியம்,செல்வகுமார்,ஷீலா,நாகராஜ்,குமார், அணிகளின் துணை அமைப்பாளர்கள் மூர்த்தி, ஞானசேகர்,ஆசைத்தம்பி, இன்பராஜ், பன்னீர்செல்வம்,அசரப்,ஸ்ரீராம், சந்திரகுமார், மகேந்திரன், தனபாக்கியம் பாலா ,நகர்மன்ற தலைவர் சிவகாமி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர்.

The post நெல்லியாளம் நகராட்சியில் திமுக வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK ,Nellialam ,Bandalur ,Dinakaran ,
× RELATED ‘குப்பைக்காக அரசு நிதி வீணாகிறது’...