×

வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது

போடி, செப். 23: போடி அருகே, முன்விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர். போடி துரைராஜபுரம் காலனியை சேர்ந்தவர் மாயி. போடி வினோபாஜி காலனி 2வது தெருவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் அர்ஜூன் (21). மாயிக்கும், அர்ஜுனுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அர்ஜூன், அவரது நண்பர் ஆறுமுகம் முனீஸ்குமார் (25) உள்ளிட்ட 3 பேர் சேர்ந்து வெட்டுக்கத்தியால் மாயியை வெட்டினர். பின்னர் கொலைமிரட்டல் விடுத்து அங்கிருந்து 3 பேரும் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த மாயி போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். புகாரின்பேரில் வழக்குப்பதிந்த போடி தாலுகா காவல் நிலைய எஸ்.ஐ இதிரிஸ்கான் அர்ஜூன், முனீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

The post வாலிபரை கத்தியால் குத்திய இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Bodi ,
× RELATED தேனி மாவட்டம் போடி அருகே கொட்டடிகுடி...