×

தேனியில் விவசாயியை தாக்கிய மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை

 

ஆண்டிபட்டி, செப். 23: தேனி அருகே விவசாயியை தாக்கிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி அருகே பூதிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(40). இவருடைய தோட்டம் சன்னாசியப்பன் கோயிலுக்கு செல்லும் கல்லூரணி பகுதியில் உள்ளது. இவருடைய தோட்டத்திற்கு அருகே உள்ள அதே பகுதியை சேர்ந்த விஜயசேகரபாண்டி என்பவரது தோட்டம் உள்ளது. மணிகண்டனுக்கும் விஜயசேகர பாண்டியனுக்கும் நிலப்பாதை சம்பந்தமாக பிரச்னை இருந்து வருவதாக தெரிகிறது.

இந்தநிலையில் கடந்த 17ம் தேதி மணிகண்டன் சன்னாசியப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத 3 பேர் மணிகண்டன் முகத்தில் துணியை போர்த்தி தாக்கியதாகவும், பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிகண்டன் நேற்று முன்தினம் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post தேனியில் விவசாயியை தாக்கிய மர்ம நபர்கள்: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Theni ,Antipatti ,Theni.… ,Dinakaran ,
× RELATED தண்ணீரை காய்ச்சி குடிங்க