×

கால்ப்லிங்ஸ் சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க பேரிகார்டுகள் வைப்பு

 

ஊட்டி,செப்.23: ஊட்டியில் இருந்து பிங்கர்போஸ்ட் வழியாக கூடலூர் செல்ல இரு சாலைகள் உள்ளன. இதில் ஒன்று கால்ப்லிங்ஸ் சாலை. இச்சாலையில் பொதுவாக வாகன போக்குவரத்து மிகவும் குறைந்து காணப்படும். அதேசமயம், சாலை அகலமாக காணப்படும். இதனால், இச்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக இயக்கப்படுகிறது. குறிப்பாக, இவ்வழியாக செல்லும் இளைஞர்கள் இரு சக்கர வாகனங்களை வேகமாக அதிவேகமாக ஓட்டுச் செல்லும் போது விபத்து ஏற்படுகிறது.

மேலும், இப்பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால், இச்சாலையில் தற்போது கனரக வாகனங்களும் சென்று வருகின்றன. இதனால், இச்சாலையில் விபத்து அபாயம் ஏற்பட்டு வந்தது. எனவே, இவ்வழித்தடத்தில் செல்லும் வாகனங்களை வேகத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியதன் பேரில், தற்போது கால்ப்லிங்ஸ் சாலையில் பேரிகார்டுகள் வைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர்.

The post கால்ப்லிங்ஸ் சாலைகளில் விபத்துக்களை தவிர்க்க பேரிகார்டுகள் வைப்பு appeared first on Dinakaran.

Tags : Kalblings roads ,Ooty ,Gudalur ,Pinkerpost ,Galplings Road ,Galplings ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் நடவு பணிகளுக்காக ஊட்டி...