×

சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய பைன் பாரஸ்ட்

 

ஊட்டி,செப்.23: நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகள் நகரில் அமைந்துள்ள பூங்காக்களுக்கு செல்வதை காட்டிலும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளுக்கு செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, அவலாஞ்சி,பைக்காரா நீர்வீழ்ச்சி,கோடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று பார்த்து ரசிக்கின்றனர். இதனிடையே ஊட்டி – கூடலூர் சாலையில் தலைக்குந்தா அருகே காமராஜர் சாகர் அணை உள்ளது. இந்த அணையின் ஒரு பகுதியில் பைன் மரங்கள் நிறைந்த வனபகுதி உள்ளது. வனங்களுக்கு நடுவே உள்ள பைன் பாரஸ்ட் பகுதியை பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.

பைன் பாரஸ்ட் நடுவே புகைப்படம் எடுத்து கொள்ளவும் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக கேரளா, கர்நாடகா மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர்.ஊட்டியில் இரண்டாவது சீசன் களைகட்டியுள்ள சூழலில் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இந்நிலையில் வெள்ளிகிழமை தினமான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வருைக இருந்தது. பைன் பாரஸ்ட், பைக்காரா நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் காணப்பட்டது.

The post சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் களைகட்டிய பைன் பாரஸ்ட் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris district ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி