×

துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் ஊராட்சி ஒன்றியம் நாயக்கனேரி மலை கிராமத்தில் உள்ள மேலூரை சேர்ந்தவர் குப்புசாமி (58). இவர் அதே ஊராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் குப்புசாமியின் மனைவி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டதால், விரக்தியில் இருந்து உள்ளார். அடிக்கடி மது அருந்திவிட்டு, அருகிலுள்ள விவசாய நிலத்திற்கு சென்று தனியாக தங்கி வந்து உள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சுமார் 7 மணியளவில் குப்புசாமி தனது நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு பறவைகளை வேட்டையாட அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் குப்புசாமி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் குப்புசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

The post துப்பாக்கியால் சுட்டு தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Kuppusamy ,Melur ,Nayakaneri Hill Village ,Madanur Panchayat Union ,Tirupathur District ,Dinakaran ,
× RELATED விவசாயிகளுக்கு ஆதரவாக மேலூரில்...