×

தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10,12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்க அழைப்பு

 

திருப்பூர், செப்.22: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை சார்பில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்து செல்லும் திறன் பெற்ற பயிற்சியாளர்கள் மேற்படிப்பினை தொடர 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இணையான சான்றிதழ்கள் பெற நிலையான வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது அகில இந்திய தொழிற்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், தமிழக பள்ளிக் கல்வி துறையின் கீழ் நடத்தப்பட்ட மொழித்தேர்வில் தனித் தேர்வர்களாக கலந்து கொண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கல்வி சான்றிதழ்களை இணைத்து அக்.,3ம் தேதிக்குள் தேதிக்குள் திருப்பூர்,அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் பிரபு தெரிவித்துள்ளார்.

The post தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் 10,12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Tirupur ,Labor Welfare and Skill Development Department ,Vocational Training Center ,Dinakaran ,
× RELATED மத்திய பஸ் நிலையத்தில் அத்துமீறும் காதல் ஜோடிகள்