×

விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை

 

திருப்பூர், செப்.22: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டன. ஒன்றிய பகுதியில் உள்ள விநாயகர் சிலைகளை நேற்றுமுன் தினம் ஊர்வலமாக எடுத்து சென்று நீர்நிலைகளில் கரைத்தனர். இந்நிலையில் மாநகர பகுதியில் வைக்கப்பட்டிருந்த 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை நேற்று ஊர்வலமாக எடுத்து வந்து கருவம்பாளையம் பகுதியில் பொதுக்கூட்டத்திற்கு பின் நீர்நிலைகளில் கரைக்க எடுத்து சென்றனர். இதனால் மாநகர பகுதியில் மாலை 4 மணி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் மாலை 4 மணிக்கு மேல் பள்ளி விடும் நேரத்தில் குழந்தைகள் பாதிக்கப்படுவதை கருதி அரை நாள் ( மதியத்திற்கு மேல்) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்து சென்றனர்.

The post விநாயகர் விசர்ஜன ஊர்வலம் பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Vinayagar Visarjana Procession ,day ,Tirupur ,Vinayagar Chaturthi festival ,
× RELATED மத்திய பஸ் நிலையத்தில் அத்துமீறும் காதல் ஜோடிகள்