×

புதிய பஸ் நிலையத்தால் நடந்து செல்லும் நிலை கல்லூரிக்கு தனி பேருந்து இயக்க வேண்டும்

 

மன்னார்குடி, செப். 20: புதிய பஸ் நிலையத்தால் நடந்து செல்லும் நிலை உள்ளதால், கல்லூரிக்கு தனி பேருந்து இயக்க வேண்டும் என்று மன்னார்குடியில் நடந்த அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரி கிளை பேரவை கூட்டம் ஆதித் யன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்டத் தலைவர் பாரத செல்வன், மாவட்ட பொருளாளர் கோபி, மாவட்டத் துணைத் தலைவர் சிவனேஷ், மாவட்டத் துணைச் செயலாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், அனைத்திந்திய இளைஞர் பெரு மன்றத்தின் மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், மாணவர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் வீரபாண்டி யன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அமைப்பின் எதிர்காலம் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில், மன்னார்குடி பேருந்து நிலையம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அரசு கல்லூரி மாணவர்கள் கல்லூரிக்கு காலத்தில் வந்து செல்ல பல்வேறு சிரமங்கள் உள்ளது, கல்லூரி ஆண்கள், பெண்கள் இருபாலரும், ஏறத்தாழ 2.5 கிலோ மீட்டர் நடந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது, இதனை போக்கிட கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனி பேருந்து கல்லூரிக்கு இயக்க வேண்டும்.

மன்னார்குடி சிவானந்தா பேருந்து நிலையத்தில் உயர் கோபுர அளவிலான பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும், கல்லூரி மாணவர்களின் கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்கி வேண்டும், பள்ளி, கல்லூரி மாண வர்களின் விடுதிக்கான உணவு கட்டண தொகையை உயர்த்தி வழங்க வேண் டும் என்பன உள்ளிட்ட. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியின் கிளை தலைவராக ஆதித்யன், செய லாளராக சுமன் ஆகியோர் புதிய பொறுப்பாளர்களாக கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

The post புதிய பஸ் நிலையத்தால் நடந்து செல்லும் நிலை கல்லூரிக்கு தனி பேருந்து இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Dinakaran ,
× RELATED திருச்சி என்எஸ்பி சாலையில்...