×

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் நேற்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் 445 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியின் கட்டுப்பாட்டில் ஒன்று முதல் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட ஆறு நாட்கள் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் நேற்று உலக தண்ணீர் தினத்தையொட்டி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடத்த வேண்டும என மாவட் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டங்கள் நடந்தன.

கூட்டத்தில், உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருள் குறித்தும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்ற விபரம், கிராம வளர்ச்சி திட்டம் 2023-24, தூய்மை பாரத இயக்க தனிநபர் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய கூட்டப்பொருட்கள் வைக்கப்பட்டன. காளையார்கோவில் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி கலந்து கொண்டார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து ஊராட்சிகளிலும் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிகள் கலந்து கொண்டனர். ஏராளமான ஊராட்சிகளில் கிராமத்தினர் கிராமத்தில் உள்ள பிரச்னைகள், அடிப்படை வசதி தேவைகள், குடிநீர் பிரச்னை, சாலை அமைத்தல், வீட்டுமனை வழங்க வேண்டும், நூறு நாள் வேலை திட்டப் பணிகள், ஊராட்சி வரவு செலவு கணக்குகள் சமர்ப்பித்தல், பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.



Tags : Gram ,Sabha ,World Water Day ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...