×

முத்துப்பேட்டை வட்டாரத்தில் 83 அரசு பள்ளிகளில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வட்டாரத்தில் உள்ள 83 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் நேற்று எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் நிகழ்வானது வெகு சிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். எண்ணும் எழுத்தும் வகுப்பறையில் நடைபெற்று வரும் பாடல்கள், கதைகள், நாடகங்கள், என் மேடை என் பேச்சு போன்ற நிகழ்ச்சிகளை மாணவர்கள் பெற்றோர்கள் முன்பு நடத்திக் காட்டினர் .மேலும் தமிழக அரசால் வழங்கப்பட்ட எண்ணும் எழுத்தும் கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்தி செயல்பாடுகளை செய்து காண்பித்தனர். பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து கல்விசார் விளையாட்டுகளில் ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் பங்கேற்றனர்.

இந்தநிலையில், இந்த எண்ணும் எழுத்தும் கற்றலைக் கொண்டாடுவோம் தொடக்க நிகழ்வானது முத்துப்பேட்டை அடுத்த உப்பூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் சிவக்குமார், ராமசாமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் இளையராஜா, மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் தரன், சுரேஷ், அன்புராணி, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தினேஷ், உப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் அரவிந்த் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

அப்போது நிகழ்ச்சியில் அந்தப் பள்ளியின் இடைநிலை ஆசிரியை அகிலா பேசுகையில் இந்த எண்ணும் எழுத்தும் திட்டமானது மாணவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றும் தன்னுடைய ஒன்றாம் வகுப்பில் பயிலும் 14மாணவர்களும் ஆங்கிலம் தமிழ் சரளமாக வாசிக்கவும் கணித அடிப்படை திறன்களை சிறப்பாக செய்யவும் பயிற்சி பெற்றுள்ளனர் எனவும் மேலும் எனது ஒன்று இரண்டு மூன்று வகுப்புகளில் கற்றல் குறைபாடு உடைய குழந்தைகள் அறவே இல்லை எனவும் தன்னுடைய மிகப்பெரிய வெற்றியாக இதை கருதுவதாகவும் தெரிவித்தார்

அதேபோல் முத்துப்பேட்டை பெரியகடைத்தெரு ஆவனா நேனா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் கற்றலை கொண்டாடுவோம் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் தலைமை வகித்தார் அப்பகுதி வார்டு உறுப்பினர் தமிம் அன்சாரி முன்னிலை வகித்தார்.  இதில் மாணவர்கள் கலந்துக்கொண்டு திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் பெற்றோர்கள், ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே...