×

விளக்குடி ஊராட்சியில் 600 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி

திருத்துறைப்பூண்டி, மார்ச் 21: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி ஊராட்சியில் நடைபெற்ற 3வது சுற்று முகாமில் 600 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.
தமிழ்நாடுஅரசு கால்நடை பாரமரிப்புத்துறை தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் தடுப்பு திட்டத்தின்கீழ் 3வது சுற்று கோமாரி நோய் தடுப்பு முகாம் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாரூ உத்தரவின்பேரில் கால்நடை பாரமரிப்புத்துறை இணை இயக்குனர் ஹமீதுஅலி, உதவி இயக்குனர் ராமலிங்கம் வழிகாட்டுதலின்படி கடந்த 1ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று திருத்துறைப்பூண்டி அருகே உள்ள விளக்குடி ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கால்நடைதுறை டாக்டர் சந்திரன், காவியா, கீர்த்தனா மற்றும் கால்நடை பராமரிப்பு ஆய்வாளர்கள் முருகானந்தம், ஜெகநாதன், சாந்தி மற்றும் உதவியாளர்கள் கொண்ட மருத்துவ குழுவினர் 600 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டனர். அனைத்து கால்நடைகளுக்கும் தாது உப்பு வழங்கப்பப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் ராமலிங்கம் ஆய்வு செய்தார்.

Tags : Lampudi Panchayat ,
× RELATED திமுக கூட்டணிக்கு ஆதரவு