×

மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பயிற்சி

க.பரமத்தி: மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களை வளர்க்க சிறப்பு அதிக கவனம் செலுத்துதல் வேண்டும் என பெற்றோர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாமில் சுகாதார செவிலியர்கள் அறிவுறுத்தினர். க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை கடைவீதியில் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றியம் முழுவதும் உள்ள மாற்றுத்திறன் கொண்ட மாணவ. மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் ஒன்றியம் முழுவதும் உள்ள 52 மாணவர்களது பெற்றோர்கள் பங்கேற்றனர். பயிற்சி தொடக்க விழாவிற்கு க.பரமத்தி வட்டார வள மைய மேற்பார்வையாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார். பள்ளிதலைமை ஆசிரியர் பானுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். பயிற்சியாளராக கிராம சுகாதார செவிலியர் பபிதா பங்கேற்று பயிற்சியில் கலந்து கொண்ட மாற்று திறன் கொண்ட மாணவர்களது பெற்றோர்களுக்களிடம் மாற்றுத் திறன் கொண்ட மாணவர்களை வளர்க்க சிறப்பு அதிக கவனம் செலுத்துதல் வேண்டும் மாணவர்களின் சுற்று சூழலை மாற்றி அமைப்பதின் முக்கியத் துவத்தை பற்றி விளக்கி கூறினார். கருத்தாளராக சிறப்பு பயிற்றுநர் புனிதவதி பயிற்சி பற்றி விளக்கி எடுத்துரைத்தார். பயிற்சி நிறைவில் வட்டார வள மைய ஒருங்கிணைப்பாளர் முரசொலி நன்றி கூறினார். ஏற்பாடுகளை சிறப்பு பயிற்றுநர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags :
× RELATED மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில்...