×

திருவிடைமருதூர் அருகே காஸ் சிலிண்டர் விலையை திரும்ப பெறகோரி மகிளா காங். ஆர்ப்பாட்டம்

திருவிடைமருதூர், மார்ச் 18: ஒன்றிய அரசின் உயர்த்தப்பட்ட சமையல் காஸ் சிலிண்டர் விலையை திரும்பப்பெற வலியுறுத்தி திருவிடைமருதூர் அருகே சோழபுரம் கடைவீதியில் மகிளா காங்கிரஸ் பெண்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடந்த ஒரு ஆண்டாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்ந்து தற்போது 1100 ரூபாயைத் தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்கள் பொருளாதார ரீதியாக தத்தளித்து வருகின்றனர்.

எனவே விலை உயர்வை திரும்பப்பெற கோரியும், சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜீவா தலைமை வகித்தார். அரியலூர் மாவட்ட தலைவி மாரியம்மாள், மாநகர தலைவர் செல்வி, திருவிடைமருதூர் வட்டத் தலைவர் ஆர்கனைஸ்மேரி உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

Tags : Mahila Cong ,Thiruvidaimarudur ,
× RELATED வாகன ஓட்டிகள் கோரிக்கை திருபுவனம்...