×

இந்தியாவிலேயே உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம்

கரூர், மார்ச் 18: கரூர் தனியார் கல்லூரியில் கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாபெரும் தமிழ்க் கனவு நிகழ்ச்சியின் வாயிலாக தமிழ் மரபு மற்றும் பண்காட்டு பரப்புரை விழா மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், தமிழ்நாட்டில் கிராமப்புற முன்னேற்ற என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், தமிழர் வாழ்வும், தமிழ்க் கதைகளும் என்ற தலைப்பில் எழுத்தாளர் செல்வதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாட்டில் கிராமப்புற முன்னேற்றம் என்ற தலைப்பில் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் பேசியதாவது:உணவுக்காக கையேந்தாத மாநிலம் எதுவென்றால் இந்தியாவிலேயே அது தமிழ்நாடு மட்டும்தான்.

அதுதான் தமிழ்நாட்டின் மக்களுக்கு ஒரு சிறந்த மாற்றம். அடுத்தபடியாக, கல்வி எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பதற்கு கிராமப்புறங்களில் கல்வி பெற வேண்டும் என்பதற்காக 1960ல் எல்லா கிராமங்களில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே உயர் கல்வி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். இப்போது உயர் கல்வி படிக்கும் மாணவர்கள் சதவீதம் இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியளவில் 50 சதவீதம் மேல் உயர்கல்வி படிக்கும் மாணவர்கள் அதிகரிக்கப்படுவார்கள். பெண் குழந்தைகள் 20 சதவீதம் அதிகரிக்கப்படும். அரசு பள்ளிகளில் படித்துவிட்டு அடுத்தபடியாக, உயர்கல்விக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதால் புதிதாக இந்த ஆண்டு 30 ஆயிரம் பேர் புதிதாக கல்லூரியில் சேர்ந்திருக்கிறார்கள் என்றார்.

தமிழர் வாழ்வும், தமிழ்க் கதைகளும் என்ற தலைப்பில் எழுத்தாளர் செல்வதுரை பேசியதாவது: வகுப்பறையில் கற்ற கல்வியை விட சமூக நண்பர்களிடையே கற்ற கல்வி அதிகம். இன்றைய கல்வி பணம் சம்பாதிக்க மட்டுமே தவிர, பண்பை சம்பாதிக்க அல்ல. இன்றைய நவீன கல்வி முறை மனிதனை மனிதனாக மதித்து மனித நேயத்துடன் வளர வேண்டும் என கதைகள் மூலம் செல்வதுரை பேசினார். கலெக்டர் பிரபு சங்கர் பேசியதாவது:

தமிழ்நாடு முழுதும் உள்ள 100 கல்லூரிகளில்தமிழர் மரபும், நாகரீகம் சமுக நீதி பெண்கள் மேம்பட, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி, இலக்கியம், கலை மற்றும் பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் தொழிலநுட்பம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி தொழில்நுட்பம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி முனைவோர்களுக்கான முன்னெடுப்புகள் கல்வி புரட்சி அரசின் திட்டங்களும், அதனை செயல்படுத்தும் முறைகளும் ஆகிய தலைப்புகளில் சிறந்த சொற்பொழிவாளர்களை கொண்டு மாபெரும் தமிழ் கனவு என்னும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்றைய நிகழ்வில், சிறந்த தமிழறிஞர்களின் சொற்பொழிவுடன் சிறந்த புத்தக காட்சி, நான் முதல்வன் போன்ற அரசின் பல்வேறு திட்டங்களும் மாணவர்களுக்கு காட்சிப்படுத்தப்படும். உதாரணமாக, கல்வி கடன் பெறுவதற்கான முறையை தொழில் முனைவோருக்கான அரசு திட்டங்கள் மற்றும் வங்கி கடன்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட அமைக்கப்பட்டுள்ளன.

இதனை மாணவர்கள் தவறாமல் படித்து பயன்பெற வேண்டும் என்றார்.அரங்கில், கல்வித்துறையில் சார்பாக, நான் முதல்வன் திட்டம், மகளிர் திட்டம், கல்வி கடனுதவி தொடர்பாக மாவட்ட முனனோடி வங்கி, தொழில் வழிகாட்டல் தொடர்பாக மாவட்ட தொழில் மையம், வேலை வாய்ப்பு வழிகாட்டுதல் தொடர்பாக மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், மாவட்ட மைய நு£லகம் சார்பில் புத்தக கண்காட்சியும் அமைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர்கள் லியாகத், கவிதா (நிலம் எடுப்பு), தனித்துணை ஆட்சியர் சைபுதீன், கல்லூரி தாளாளர் அட்லஸ் நாச்சிமுத்து உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

Tags : Tamil ,Nadu ,India ,
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...