×

வயலில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வைக்கோல் உருளைகள் கரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் சிறப்பு ரோந்து பணி ஒரேநாளில் 2,459 வழக்குகள் பதிவு

கரூர்: கரூர் மாவட்டம் முழுதும் கடந்த 14ம் தேதி நடந்த சிறப்பு ரோந்து பணியில் 2,459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தெரிவித்துள்ளார். இதில் மீன்வெட்டும் கத்தியுடன் சுற்றித்திரிந்த சென்னையை சேர்ந்த கொலை வழக்கு குற்றவாளி ஒருவரும் சிக்கினார். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கரூர் மாவட்டம் முழுதும் 14ம்தேதி அன்று இரவு சிறப்பு ரோந்து பணியாக குற்றத்தடுப்பு மற்றும் வாகன விபத்து குறைப்பது தொடர்பாக கரூர் மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் உத்தரவின்படி, ஏடிஎஸ்பி தலைமையில் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசார்கள் மூலம் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளிலும், மாவட்டத்தின் முக்கியி சந்திப்புகளிலும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 2459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் 13 நம்பர் பிளேட் இல்லாத மற்றும் போலியான நம்பர் பிளேட் உள்ள வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக 47 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.எப்ஆர்எஸ் (பேஸ் ரெகனைஸ்டு சாப்ட்வேர்) மூலம் 150 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி மூன்று தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதில் 13 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கரூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட உழைப்பாளி நகர்ப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த சென்னையை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (25) என்பவரை, இரவு ரோந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில், சென்னை காவல் நிலையத்தில் பதிவாகியுள்ள கொலை வழக்கு குற்றவாளி என தெரியவந்தது. இவரிடம் இருந்து மீன் வெட்டும் கத்தி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நபர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குற்றத்தடுப்பு மற்றும் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தொடர் சோதனை நடைபெறும் எனவும், வாகன விபத்துக்களை தடுக்கும் வகையில் தொடர்ந்து வாகன சோதனை செயல்படும் எனவும், மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் தெரிவித்துள்ளார்.

Tags : Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்