×

மாணவ, மாணவிகளுக்கு முட்டையுடன் மதிய உணவு

கரூர்: தமிழக முதல்வரின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் முட்டையுடன் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக முதல்வரின் 70வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், கரூர் வடக்கு மாநகர பகுதிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம், வாங்கப்பாளையம், விவிஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் முட்டையுடன் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், கரூர் வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 850 மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவியாக கல்வி உபகரணங்கள் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடக்கு மாநகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மாநகராட்சி மேயர் கவிதா கலந்து கொண்டு கல்வி உபகரணங்களை வழங்கினார். 5வது வார்டு உறுப்பினர் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி உறுப்பினர்கள் மாரியம்மாள், பூங்கோதை, ராஜேஸ்வரி உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.



Tags :
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா