×

கஞ்சா விற்பனை செய்த 5 மாணவர்கள் கைது

தாம்பரம்: சேலையூர் - அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி அருகே பள்ளிக்கரணை மது விலக்கு பிரிவு போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக, அங்கு சுற்றித்திரிந்த 5 பேரை மடக்கி, பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதையடுத்து, அவர்களை சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திர மாநிலம், குண்டூரை சேர்ந்த பவன்குமார் (20), கடப்பாவை சேர்ந்த ஜித்தேந்திரநாத் ரெட்டி (21), மேற்கு தாம்பரத்தை சேர்ந்த அப்துல் அல்தாப் (21), விஷால் (19), பாரத் (19) என்பதும், இவர்கள் 5 பேரும் தாம்பரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளில் பொறியியல் பட்டபடிப்பு படித்து வந்ததும், பகுதி நேரமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர்.

Tags :
× RELATED இளம்பெண் தற்கொலை வழக்கில்...