×

சாலையில் தொடரும் ஆக்கிரமிப்புகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் வாகனங்கள்

சிங்கம்புணரி, ஏப்.28: சிங்கம்புணரி நகர் வழியாக திருப்பத்தூர் நத்தம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காசியாப்பிள்ளை நகர் முதல் நான்கு ரோடு சந்திப்பு வரை சாலை இருபுறமும் சர்வீஸ் ரோடு மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் ரோடு முழுவதும் சாலையோரக் கடைகள் ஆக்கிரமித்து உள்ளது. ஜவுளிக்கடை ஹோட்டல் உள்ளிட்ட பெரிய கடைகள் முன்பு அதிகளவில், பொதுமக்கள் டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்தி வருகின்றனர் மெயின் ரோட்டிலும் சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. மேலும் சாலையில் இரவு நேரங்களில் மாடுகள் படுத்திருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. அதிவேக வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து அடிக்கடி விபத்துக்குள்ளாகும் நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.நேற்று மதியம் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்ததால் திருச்சி செல்லும் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மோதியது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. எனவே சாலை இருபுறமும் உள்ள சர்வீஸ் ரோடுகளை அகற்றி விட்டு சாலையின் நடுவே காங்கிரிட் தடுப்புகள் அமைத்து இருவழி சாலையாக மாற்றினால் மட்டுமே விபத்துக்கள் குறைய வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறையினர் இருவழிச் சாலையாக மாற்ற உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பெரியகருப்பூர் சாமுண்டீஸ்வரி கோயில் காப்பு கட்டு விழா