×

பக்தர்களுக்கு தடையால் களையிழந்த தைப்பூச விழா

திருப்பூர், ஜன.19: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கணகிரி முருகன் கோயில், சிவன்மலை முருகன் கோயில், ஊத்துக்குளி கதித்தமலை முருகன் கோயில், அலகு மலை முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களில் நடை சாத்தப்பட்டது. பூசாரிகள் மட்டும் கோயில்களில் தைப்பூச சிறப்பு வழிபாடுகளை நடத்தினர். தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் முருக பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர். பக்தர்கள் பலர் கோயிலின் வெளியே நின்று சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் உள்ள முருகன் கோயில்களில் வழிபாடு நடத்திவிட்டு செல்வார்கள். ஆனால் தடை காரணமாக இந்த ஆண்டு முருகன் கோயில்கள் பக்தர்கள் இல்லாமல் களையிழந்து காணப்பட்டன. திருப்பூர் வாலிபாளையம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Thaipusam ,
× RELATED பழநியில் தைப்பூச பக்தர்கள் 3 ஆயிரம் பேருக்கு அன்னதானம்