×

விவசாய விழிப்புணர்வு கருத்தரங்கம்

உடுமலை, ஜன. 8: விவசாய பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகள் பற்றிய விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் உடுமலையில்  நேற்று நடந்தது. பரமேஸ்வரன் வரவேற்றார். அபேடா சேர்மன் மாதையன் அங்கமுத்து தலைமை வகித்து பேசினார். பொள்ளாச்சி எம்பி., சண்முகசுந்தரம் திட்ட விளக்க உரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் வினீத் கலந்துகொண்டு, விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதுடன், எப்படி சந்தைப்படுத்துவது என்பது குறித்து விளக்கினார். உணவு பதப்படுத்துதல் துறை சிறப்பு செயலாளர் மனோஜ்ராஜன் கருத்தரங்க உரையாற்றினார்.

கூட்டத்தில், திமுக மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் பாபு, ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், ராதாகிருஷ்ணன், இளைஞரணி சரவணன், பொதுக்குழு உறுப்பினர் ரவி, நகர திமுக செயலாளர் மத்தீன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரகுபதி, வட்டாட்சியர் ராமலிங்கம், பொள்ளாச்சி சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் கோபாலகிருஷ்ணன், உடுமலை சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ரவீந்திரன் கெங்குசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். டெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னையை சேர்ந்த 15 வல்லுநர்கள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர். முன்னதாக பில்டர்ஸ் இந்தியா பரமேஸ்வரன் வரவேற்க, முடிவில் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Tags : Agricultural Awareness ,
× RELATED தோட்டக்கலை மற்றும் விவசாய...