×

2 நாட்களுக்கு பின் சடலம் மீட்பு கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் யாகம்

அரியலூர்,டிச.5: அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி கோயில் சன்னதியிலுள்ள மகா பிரத்தியங்கார தேவிக்கு கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு மிளகாய் சண்டியாகம் நடைபெற்றது. கார்த்திகை மாத அமாவாசையான நேற்று நடைபெற்ற மிளகாய் சண்டியாகத்தில் நாட்டு மக்கள் நலன்கருதி மிளகாயை கொட்டி சண்டி யாகம் நடைபெற்றது. சனி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்திருந்தனர்.

ஆலயத்தில் நடைபெற்ற யாகத்தில் மஞ்சள், குங்குமம், கரும்பு, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, ஒரோஜனை, ரோஜா மொட்டு, செண்பக மொட்டு, ஆவார பொட்டு, வெண் கடுகு, வால் மிளகு, வசம்பு, சுக்கு, திப்பிலி, முந்திரி, கடுக்காய், வெட்டிவேர், பூசணிக்காய், பரங்கிக்காய், சேலைகள் உள்ளிட்ட பல்வேறு மூலிகைகள் மற்றும் திராட்சை, ஆப்பிள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, சீதா உள்ளிட்ட ஏராளமான பழங்கள் பட்டு சேலைகள் யாகத்தில் போட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Chili ,Chamundeeswari ,Karthika ,
× RELATED பொய்யாநல்லூர் சாமுண்டீஸ்வரி கோயிலில் மிளகாய் சண்டி யாகம்