×

வருங்கால வைப்புநிதி குறைகளை இணையதளம் மூலம் தெரிவிக்கலாம்

நாகர்கோவில், ஏப். 23:நாகர்கோவில் வருங்கால வைப்புநிதி ஆணையர் ரௌஷன் கஷ்யப் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வைப்புநிதி சம்பந்தமாக கருத்து பரிமாற்றம் செய்யவும் முக்கிய தகவல்களை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் தொழிலாளர்கள், ெதாழில் நிறுவனங்களின் குறைகளை நிவர்த்தி செய்வதையும் எளிதாக்கும் வகையில் நடைபெற்று வந்த வைப்புநிதி உங்கள் அருகில் என்ற நிகழ்வுக்கு பதிலாக இணையதள கருத்தரங்கு  வருகிற மே 10ம் தேதி காலை 10 மணியிலிருந்து மதியம் 1 மணி வரையும் மற்றும் மாலை 3 மணியிலிருந்து 4 மணிவரை நடக்கிறது. ஆகையால் வருங்கால வைப்புநிதி சந்தாதாரராக சேர தகுதியிருந்தும் சேர்க்கப்படாமல் இருப்பவர்கள், உலகளாவிய கணக்கு எண் (UNA) கிடைக்கப்பெறாதவர்கள், செயலிழந்த உறுப்பினர் கணக்கை முடிக்க விரும்புபவர்கள் மாத சந்தா செலுத்துவது தொடர்பாக குறையுள்ளவர்கள் விண்ணப்பம் அனுப்பி உரிய காலத்தில் வைப்புநிதி கிடைக்கப்பெறாதவர்கள், ஓய்வூதியம் தொடர்பான குறைகள் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்தால் மேற்கூறிய நாளில் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்நிகழ்வில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை (EMail id) வருங்கால வைப்புநிதி அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ro.nagercoil@epfindin.gov.in அனுப்பி வைக்குபடி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மின்னஞ்சல் முகவரி அனுப்புபவர்களுக்கு இணையதள இணைப்பு முகவரி அனுப்பப்பட்டு அவர்கள் அதன் மூலம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம். மேலும் தொழிலாளர்கள், தொழில் நிறுவனங்கள் தங்கள் குறைதீர் மனுக்களை வருகிற மே 5ம் தேதி அலுவலகத்தில் நேரிலும் அல்லது அலுவலக முகவரிக்கு தபால் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை