×

மது விற்றவர் கைது

திண்டுக்கல், ஏப். 20: திண்டுக்கல் அருகே சிறுமலை பிரிவு பகுதியில் மது விற்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தாலுகா எஸ்ஐக்கள் விஜய், கருப்பையா தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்றனர். அப்போது அங்கு சிறுமலை அகஸ்தியார்புரத்தை சேர்ந்த அழகர்சாமி (72) என்பவர் மது விற்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED திருவாரூர் பைபாஸ் சாலை அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த நூலக சாலை