
அரியலூர்,ஏப்.19: அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 31 ேபர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இதுவரை 5103 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர், இதில் 4860 பேர் குணமடைந்துள்ளனர், மீதமுள்ளவர்களில் அரியலூர் 2, திருமானூர் 2, செந்துறை 5, தா.பழூர் 2, ஆண்டிமடம் 3, ஜெயங்கொண்டம் 13, வெளியூர் நபர்கள் 4 பேர் என 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அரியலூர் மருத்துவக்கல்லூரி, திருச்சி, தஞ்சை, பிற மாவட்ட தனியார் மருத்துவமனை, அரியலூர் மாவட்ட தனியார் மருத்துவமனை, கொரோனா சிறப்பு முகாம், வீடுகளில் தனமைப்படுத்தப்பட்டவர்கள் என 194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், இதுவரை 49 பேர் இறந்துள்ளனர். மேலும் அரியலூர் நகரில் சாக்கோட்டை தெரு, வேலாயுதம் நகர் முதல் தெரு, நல்லாம்பாளையம், அரண்மனைகுறிச்சி, குருவலாப்பர் கோவில் ஆகிய இடங்கள் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.