×

வீட்டின் பூட்டை உடைத்து பணம் துணிகர கொள்ளை

திட்டக்குடி, ஏப். 18:   ராமநத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கடலூர் மாவட்டம் ராமநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் முத்துலட்சுமி (34). இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியில் சென்று விட்டு மீண்டும் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு வந்தபோது முன்பக்கம் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 24 ஆயிரம் ரொக்கப் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து முத்துலட்சுமி ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். கடலூரில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு மோப்பநாய் சிறிது தூரம் ஓடி நின்றது.

Tags :
× RELATED குடும்பத்தகராறில் விபரீதம் கிணற்றில்...