×

கேசினோ - டிபிஓ., சாலையில் வாகனங்களை நிறுத்துவதால் பொதுமக்கள் பாதிப்பு

ஊட்டி,ஏப்.18: ஊட்டி நகரின் முக்கிய சாலையான கேசினோ சந்திப்பு முதல் டிபிஓ., வரையில் சாலையில் இருபுறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டிக்கு நாள் தோறும் கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக  வந்து செல்கின்றனர். அதேேபால், ஏராளமான சுற்றுலா பயணிகளும் இங்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் வாகனங்கள் கேசினோ சந்திப்பு முதல் டிபிஓ., வரை நிறுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதனால், பெரும்பாலான வாகனங்கள் இச்சாலையோரங்களில் நிறுத்துவது வழக்கம். ஆனால், இச்சாலையில் ஒரு புறத்தில் வாகனங்களை நிறுத்தாமல், இரு புறங்களிலும் சில சமயங்களில் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். இதனால், இச்சாலையில் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கின்றனர். எனவே, இச்சாலையில் வாகன நெரிசல் ஏற்படாமல் இருக்க ஒருபுறம் மட்டும் வாகனங்கள் நிறத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் ஓட்டுநர்கள் வலியுறத்தியுள்ளனர்.

Tags : - DPO ,
× RELATED கொரோனா பரவலால் திருச்சூர் பூரம் திருவிழாவை எளிய முறையில் கொண்டாட முடிவு