×

ஆய்வு செய்த கலெக்டர் தகவல் களமாவூர் மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்

புதுக்கோட்டை, ஏப்.17: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகேயுள்ள களமாவூர் ரயில்வே மேம்பாலத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. திருநாவுக்கரசர் கோரிக்கைவிடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை-திருச்சி நெடுஞ்சாலையில் கீரனூர் அருகேயுள்ள களமாவூர் ரயில்வே மேம்பாலப் பணிகள் நீண்ட காலமாக தொய்வாகவே இருந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு நடத்தினேன்.

பாலப் பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு பாலத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. தற்போது மேம்பாலப் பணிகள் முழுமையாக நிறைவடைந்து விட்டன. பாலப்பணிகளின்போது அருகே அமைக்கப்பட்ட மாற்றுச் சாலை தற்போது மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, முடிவுற்ற மேம்பாலத்தை விரைவில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மாவட்ட கலெக்டரும், நெடுஞ்சாலைத் துறையினரும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags : Collector ,Kalamavoor ,
× RELATED ஊராட்சி நிதி முறைகேடு கலெக்டர் விசாரிக்க உத்தரவு