×

பஞ்சாப் நேஷனல் வங்கியின் நிறுவன நாள் நகைக்கடையில் பணம் திருடிய கேஷியர்

கோவை, ஏப்.17: கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பிரபலமான நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 2 ஆண்டுகளாக கோவை கல்வீராம்பாளையம் விஜய் நகரை சேர்ந்த பாபுராஜன் (40) என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு கேஷியராக நியமிக்கப்பட்ட அவர் சில நாட்களாக வேலைக்கு வருவதில்லை. அவர் பணிபுரிந்தபோது கணக்கில் முரண்பாடு ஏற்பட்டது. அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த நிர்வாகத்தினர் கணக்கை ஆய்வு செய்தபோது ரூ.51 ஆயிரத்து 450ஐ பாபுராஜன் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Punjab National Bank ,
× RELATED பஞ்சாப் நேசனல் வங்கியில் கடன் பெற்று...