×

க.பரமத்தி வீரமாத்தியம்மன் கோயிலில் பங்குனி அமாவாசை வழிபாடு

க.பரமத்தி, ஏப்.12: பங்குனிஅமாவாசை வீரமாத்தியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டது. க.பரமத்தி ஒன்றியம் குப்பம் ஊராட்சி உப்புபாளையத்தில் சக்தி வீரமாத்தியம்மன் கோயில் உள்ளது. இங்கு அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய விரத நாட்களில் வீரமாத்தியம்மனுக்கும், ஏழு கன்னிமார்களான அபிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ் ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். நேற்று பங்குனி அமாவாசையையொட்டி பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், கரும்புச்சாறு போன்ற 18 வகை மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

இதேபோல் குப்பம் பெரியகாண்டியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், குன்னுடையான், பொன்னர் சங்கர், தங்காயி ஏழு கன்னிமார் தெய்வங்களு க்கும் பல்வேறு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. இதே போல குப்பம் பொன்காளியம்மன், க.பரமத்தி அஷ்ட நாகேஸ்வரி அம்மன், கோயில்களிலும் அமாவாசையையொட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பக்தர்களால் வழிபாடு செய்யப்பட்டது.

Tags : K. Paramathi Veeramathiamman Temple ,
× RELATED கரூர் அருகே வடசேரி பெரிய ஏரியில் இறந்த கிடந்த புள்ளி மான்